ஜன.22 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா, வரும் 22 ஆம் தேதி வெகுவிமரிசையாக நடக்க உள்ளது. அந்நாளில், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, வங்கி, கலால் அலுவலகம், பிஎஸ்என்எல், தபால் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் மதியம் 2.30 மணி வரை செயல்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
0 Comments